• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருப்புத்தூரில் காவலர்களுக்கு 7.4 கோடியில் குடியிருப்பு வசதி…

Byமதி

Oct 26, 2021

திருப்புத்தூரில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி விசுவநாதன் 7.4 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ள காவலர் குடியிருப்பை ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் காவலர் குடியிருப்பு பகுதியில் புதிதாக ரூபாய் 7.4 கோடி செலவில் கட்டப்பட உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது காவல் துணை கண்காணிப்பாளர் முதல் காவலர்கள் வரை தங்கியிருக்கும் வீடுகளை சென்று பார்வையிட்டதோடு, பழுதடைந்த வீடுகள் உள்ளிட்டவற்றையும் கணக்கெடுத்தார்.

அதோடு புதிதாக காவலர் குடியிருப்பு அமைய உள்ள பகுதியை பார்வையிட்டு, கழிவு நீர் செல்லும் வழித்தடம், சாலைவசதிகள், மற்றும் கட்டுமான பணிகள் அமைய உள்ள இடம் தண்ணீர் வசதி உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். உடன் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், திருப்புத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், திருப்புத்தூர் நகர காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் மற்றும் காவல் அலுவலர்கள் உடனிருந்தனர்.