• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இரவிபுதூர் ஊராட்சியில் உலக மகளிர் தினம்..,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78- வது பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது.

மருங்கூர் பேரூராட்சி தலைவர் லெட்சுமி சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என். தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு 500 பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

புரட்சித்தலைவி அம்மா பெண்களின் முன்னேற்றத்திற்காக தொட்டில் குழந்தைத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், தாலிக்குத் தங்கம், மானிய இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தவர் என அவர் குறிப்பிட்டார். எடப்பாடியார் தலைமையில் மக்கள் நல ஆட்சி மீண்டும் அமையும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியால் தானிய கிட்டங்கி, பேருந்து நிழற்குடை, நியாயவிலை கடை கட்டிடம் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டதாகவும், மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டதாகவும் கூறினார். தேர்தல் வாக்குறுதிகளான குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், இளைஞர்களுக்கு மாத உதவி உள்ளிட்ட அறிவிப்புகள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் பேசினார்.