• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

*தொண்டர்களின் முடிவே இறுதியானது.. – ஆதி ராஜாராம் அதிரடி*

Byமதி

Oct 26, 2021

அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், சசிகலாவை கட்சியில் இணைப்பதை ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்வார்கள் என அறிவத்தார். இது அதிமுகவில் மிகப்பெரிய அதிர்வினை ஏற்படுத்தியது.

இருப்பினும், எடப்பாடி பழனிச்சாமி, ஜெயகுமார், மற்றும் பலர் இதை ஏற்க மறுத்துள்ளனர்.

இந்த நிலையில், அதிமுக நிர்வாகி தென்சென்னை வடக்கு ( கிழக்கு ) மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் அளித்த பேட்டியில், அதிமுக தொண்டர்களால் உருவான இயக்கம். தொண்டர்களின் முடிவைத்தான் ஒருங்கிணைப்பாளர்கள் முன்வைக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர்களின் முடிவை தொண்டர்களிடம் அவர்கள் திணிக்ககூடாது என்று கூறினார். மேலும் ஓபிஎஸ் ஒரு போதும் சசிகலாவை ஆதரிக்க மாட்டார் என நம்புவதாகவும் தெரிவித்தார்.