• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

குமரியில் காவல்துறையால் தடைவிதிக்கபட்ட ஆர். எஸ். எஸ். ஊர்வலம்..,

குமரி மாவட்டத்தில் காவல்துறையால் தடைவிதிக்கபட்ட ஆர். எஸ். எஸ். ஊர்வலம் நீதிமன்ற உத்தரவோடு நடைபெற்றது. பெண்கள் பூக்கள் தூவி தொடங்கி வைத்தனர்.

குமரி மேற்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ் பதசஞ்சலன் என்ற அணிவகுப்பு ஊர்வலம் நடத்தது காவல்துறை தடை விதித்ததை தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிகழ்ச்சி நடத்த நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இதன் அடிப்படையில் குமரி மாவட்டம் மூசாரி சந்திப்பு பகுதியில் இருந்து பாலப்பள்ளம் வடக்கு பிடாரை வரை நடைபெற்றது. காவி கொடி(டிசம்பர்_19)ல் அணிவகுப்ளுடன் நடத்த இந்த ஊர்வலத்தில் ஏராளமான சுயம் சேவகர்கள் சீருடையுடன் கலந்து கொண்டனர். வழி நெடுகிலும் பொதுமக்கள் பூக்கள் தூவி வரவேற்ப்பு அளித்தனர். தொடர்ந்து காவி கொடியேற்றி பொது கூட்டம் நடந்தது. பொது கூட்டத்தில் யோகா , சிலம்பாட்டம் , உட்பட தற்காப்பு கலைகள் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பொது கூட்டமும் நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் காவல் துறை தடையை அடுத்து நீதிமன்ற உத்தரவு படி நடந்த ஆர்.எஸ்.எஸ்.,ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்ததில், பொது மக்களை காட்டிலும் காவல்துறையினர் நிம்மதி மூச்சு விட்டு அவர்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர் என்பது பொது மக்களின் கருத்தாக உள்ளது.