• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் வீதிகளில் தங்கச்சப்பரத்தில் சாமி வீதி உலா..!

Byவிஷா

Nov 20, 2023

கார்த்திகைத் தீபத்திருநாளின் மூன்றாம் திருநாளான இன்று திருப்பரங்குன்ற வீதிகளில் தங்கச் சப்பரத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது.
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபத்திருநாளின் மூன்றாம் திருநாளான இன்று தங்கச் சப்ரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை மூன்று வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதைத் தொடர்ந்து, கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று மாலை சோமவார பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் மனதாரப் பிரார்த்தனை செய்து சிவபெருமான் அருள் காட்சி பெற வேண்டுகிறோம்.