• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மேற்கு மண்டலத்தில் சிறந்த காவல் நிலையங்களில் ஒன்றாக திருச்செங்கோடு நகர காவல்நிலையம் தேர்வு..!

மேற்கு மண்டலத்தில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையங்கள் ஆக தேர்வு செய்யப்பட்ட மூன்று காவல் நிலையங்களில் ஒன்றாக திருச்செங்கோடு நகர காவல் நிலையம் தேர்வு செய்யப் பட்டுள்ளது.


மண்டலங்களுக்குள் தேர்வு செய்யப்பட்ட காவல் நிலையங்களில் மாநிலத்தில் சிறந்த காவல் நிலையத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு (ஐடியல் விங்) காவல்துறை தலைவர் (ஐ.ஜி) தினகரன் இன்று ஆய்வு செய்தார்.


காவல் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள நூல் நிலையம் வரவேற்பு அறை தலைமை எழுத்தர் அறை கணினி அறை காவலர்கள் ஓய்வு அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஐஜி தினகரன் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வுப் பணியின் போது நாமக்கல் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்லபாண்டியன் திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் பயிற்சி துணை கண்காணிப்பாளர் பவித்ரா ஆகியோர் உடன் இருந்தனர் முன்னதாக காவல் நிலையத்திற்கு வந்த ஐஜி தினகரனுக்கு கூடுதல் துணை கண்காணிப்பாளர் செல்லபாண்டியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் அதனைத் தொடர்ந்து காவலர் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதனை ஐஜி தினகரன் ஏற்றுக்கொண்டார்.