• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

130 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி

Byமதி

Oct 26, 2021

நேற்று இரவு நடைபெற்ற ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 191 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்கள் சரிய ஸ்காட்லாந்து அணி 10.2 ஓவர்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், டி20 உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.