• Tue. Apr 30th, 2024

அரசு பேருந்துக் கட்டணம் திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிருப்தி…

Byமதி

Oct 26, 2021

மராட்டியத்தில் மாநில சாலை போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் 16 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு நேற்று திடீரென எம்.எஸ்.ஆர்.டி.சி.யின் அனைத்து வகை பேருந்துகளின் கட்டணத்தையும் உயர்த்தியது. தீபாவளி சமயத்தில் மும்பை- புனே மற்றும் மும்பையில் இருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படும் பஸ்சில் கூட்டம் அலைமோதும். இந்த நேரத்தில் மாநிலத்தில் ஏ.சி. உள்பட அனைத்து வகையான அரசு பஸ்களில் கட்டண உயர்வு அமலுக்கு வந்து உள்ளது.

மாநில போக்குவரத்து கழகத்திற்கு தினந்தோறும் டீசலுக்கு மட்டும் ரூ.8.8 கோடி செலவாகிறது. இது மொத்த செலவான ரூ.21 கோடியில் 38 சதவீதம். அதே நேரத்தில் அக்டோபரில் தினசரி சராசரி வருவாய் ரூ.12.9 கோடி தான். தற்போது தினந்தோறும் 27 லட்சம் பேர் அரசு பஸ்சில் பயணம் செய்கின்றனர். கொரோனாக்கு முன்பு இருந்த பயணிகள் எண்ணிக்கையில் 41 சதவீதம் தான்.

16 ஆயிரம் பஸ்சில் தற்போது 12 ஆயிரத்து 500 பஸ்கள் தான் இயக்கப்படுகின்றன. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவே தான் இந்த விலை உயர்வு என கூறப்படுகிறது.

போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் சேகர் சன்னே கூறும்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து கழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே கட்டணம் உயர்த்துவால் ரூ.50 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். டீசல் விலை உயர்வு காரணமாக டிக்கெட் கட்டணத்தை 17.17 சதவீதம் உயர்த்த முடிவு செய்து உள்ளோம்.

கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு மாநில போக்குவரத்து கழகம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. கட்டண உயர்வுக்கு மாநில போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *