• Sat. Feb 14th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

விழுப்புரம் – திருப்பதி இடையிலான ரயில் சேவையில் மாற்றம்..!

Byவிஷா

Oct 9, 2023

பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரம் – திருப்பதி இடையிலான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் விழுப்புரம் – திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் காட்பாடி – திருப்பதி இடையே இன்று முதல் அக்டோபர் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காட்பாடியுடன் நிறுபத்தப்படும். அதே போல் மறு மார்க்கத்தில் திருப்பதியில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்படும் திருப்பதி – விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் திருப்பதி – காட்பாடி இடையே இன்று முதல் 15ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி – காட்பாடி, காட்பாடி – திருப்பதி பயணிகள் ரயில் மற்றும் காட்பாடி – ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை – காட்பாடி விரைவு ரயில் சிறப்பு ரயில்களின் சேவையும் அக்டோபர் 15ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் உற்சவத்தை காண தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பதி இந்த சமயத்தில் செல்வர். இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் திருப்பதி செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.