• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருப்பதியில் இரண்டரை வயது சிறுவன் கடத்தல்..!

Byவிஷா

Oct 3, 2023
திருப்பதியில் சென்னையைச் சேர்ந்த தம்பதியின் இரண்டரை வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ராமசாமி சந்திரசேகர் என்பவர் தனது மனைவி, மற்றும் இரண்டு மகன்களுடன் திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தார். ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்துக்குப் பிறகு நேற்று இரவு மீண்டும் சென்னை செல்ல திருப்பதி பேருந்து நிலையம் வந்தார்.

சென்னை பேருந்துக்காக பேருந்து நிலையத்தின் பிளாட்பார்ம் எண் மூன்றில் அவர்கள் காத்திருந்தனர். சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கிவிட்டனர். இரண்டரை மணி அளவில் மகன் அருள்முருகன் (2) காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பேருந்து நிலையம் முழுவதும் தேடினர். ஆனால் சிறுவன் அருள்முருகனைக் காணவில்லை.
இதனைத் தொடர்ந்து சந்திரசேகர் அளித்த புகாரை அடுத்து திருப்பதி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, குழந்தை அருள்குமரனை பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை சந்திப்பில் உள்ள கென்சஸ் ஓட்டல் நோக்கி ஒருவர் தூக்கிச் சென்றது பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.