• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

குடிதண்ணீருடன் சாக்கடை தண்ணீர் கலப்பதால் பொதுமக்கள் அவதி..,

Byஜெ.துரை

Sep 25, 2023

சென்னை வேளச்சேரி கண்ணபிரான் தெருவில் கார்த்திகேயன் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்பில் சுமார் 12 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த குடியிருப்பு வாசிகள் குடியிருக்கும் பகுதியில் சாக்கடை தண்ணீரானது நிரம்பி வளிவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இந்த சாக்கடை நீரானது குடிதண்ணீருடன் கலப்பதால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.