• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை..!

Byவிஷா

Sep 15, 2023

சென்னையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகெங்கும் பல இடங்களில் டிரோன்கள் என்னும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அனைத்து இடங்களிலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்குத் தேசியப் பாதுகாப்புப் படை ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது. இதில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் GANDIV-V என்ற ஒத்திகை பயிற்சி நடைபெறுகிறது.
எனவே சென்னையில் இன்று முதல் வரும் 17ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 3 நாட்களுக்குச் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.