• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவையில் கல்நெஞ்சையும் கரைய வைக்கும் சம்பவம்…

Byவிஷா

Oct 22, 2021

கோவையில் 3 மாத ஆண் குழந்தையை கொன்று விட்டு, 3 மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கி விட்டு தப்பிச் சென்ற பாட்டியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கல்நெஞ்சையும் கரைய வைக்கும் சம்பவமாக அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.


கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகரை சேர்ந்த பாஸ்கரன்-ஐஸ்வரியா தம்பதிக்கு மூன்று மாத இரட்டைக் குழந்தைகளான ஆண், பெண் உள்ளது. நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நிலையில், இந்த இரட்டை குழந்தைகள், பாட்டி சாந்தியுடன் இருந்துள்ளது. வீடு திரும்பிய ஐஸ்வர்யா, தனது இரட்டை குழந்தைகள் காயங்களுடனும் மயக்க நிலையிலும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை உயிரிழந்து விட்டதும், பெண் குழந்தைக்கு கையில் முறிவு ஏற்பட்டதும் தெரியவந்தது.


இச்சம்பவம் குறித்து துடியலூர் காவல்துறையினரின் விசாரணையில், பேரனை பாட்டி சாந்தி கொலை செய்தும், பேத்தியை தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து காணாமல்போன சாந்தியை துடியலூர் போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக சாந்தி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.