சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மற்றும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புத்திரகவுண்டன்பாளையத்தில் மட்டும் சோதனை செய்து வரும் இடங்களை ஏத்தாப்பூர் காவல் நிலைய சரகம் வெளியிட்டுள்ளது.
புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள இளங்கோவன் அவர்களின் வீடு மற்றும் தோட்டத்து வீட்டிலும், புத்திரகவுண்டன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ஈஸ்வர் ஜுவல்லர்ஸ், இதன் உரிமையாளர் அசோக்குமாரின் வீட்டிலும் சோதனை நடக்கிறது.

புத்திரகவுண்டன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நிவேதா எலெக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் வரதராஜன், இளங்கோ அவர்களின் அக்கா ராஜகுமாரி அவரின் கணவர் கருப்பையா வீடு, முன்னாள் தொடக்க வேளாண்மை வங்கி பணியாளரான ஜெயராமன் என்பவரது வீட்டில் தொடர்ந்து கணக்குகளை சரி பார்த்து வருகின்றனர்.
மேலும் இளங்கோ அவர்களின் மாமனார் சாம்பமூர்த்தி வீட்டிலும், நிவேதா எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளரின் உமையாள்புரம் பகுதியில் உள்ள வரதராஜ் என்பவரது வீட்டிலும் சோதனை செய்து கொண்டுள்ளனர். இளங்கோவன் வீட்டில் முப்பது கிலோ தங்கமும் 60 கிலோ வெள்ளியும் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.