கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறையில் கடல் சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும், வீடுகளில் கடல் தண்ணீர் புகாமல் இருக்க 250 மீட்டர் தூண்டில் வளைவு அமைக்க கிராம மக்கள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் இடம் கோரிக்கை வைத்தனர்.

இன்று இரையுமன்துறைக்கு சென்ற விஜய்வசந்த் அந்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள ஆற்றின் கரையில் சுவர் அமைத்து தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பட், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆமோஸ், மாவட்ட துணை தலைவர் மகேஷ்லாசர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் திபாகர், மேற்கு மாவட்ட ஓ. பி. சி பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டுவர்ட், வட்டார தலைவர் கிறிஸ்டோபர், மரியதாசன், பங்கு தந்தை ரெஜீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- “ப்ரொபெர்டி ஃபேர் 2026” கண்காட்சி..,
- வடவள்ளி பகுதியில் சர்ச் கட்ட பாஜகவினர் எதிர்ப்பு..,
- பொதுமக்கள் விரட்டி பிடித்த பல நாள் திருடன்..,
- குமரி ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தொடக்கம்..,
- எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் விழா..,
- எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்..,
- அரசு பேருந்துகள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் அவலம்..,
- ஆர்.என்.ரவி அரசியல் கட்சியில் சேரலாம் சபாநாயகர் அறிவுரை..,
- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குமரி மாவட்ட மாநாடு..,
- வி. சி.க சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்..,





