• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டிஎன்பிஎஸ்ஸி தலைவர் நியமனம் : பட்டியலை திருப்பி அனுப்பிய ஆளுநர்..!

Byவிஷா

Aug 22, 2023

தமிழக அரசின் டிஎன்பிஎஸ்ஸி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான தமிழக அரசின் பரிந்துரை பட்டியலை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
தமிழக அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயரையும், 10 உறுப்பினர் பதவிகளுக்கும் பரிந்துரை பட்டியலை அனுப்பியது. தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில், ஜூன் 30-ல் ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்ஸி தலைவராக நியமித்து தமிழக அரசு ஆளுநருக்கு கோப்புகளை அனுப்பியது. தற்போது, டிஎன்பிசி தலைவராக சைலேந்திரபாபு நியமித்து தமிழக அரசு அனுப்பிய கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என்றும், டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களை கேட்டும் இந்த கோப்பை திருப்பி அனுப்பியுள்ளார். மேலும், நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா என்று அரசுக்கு ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார்.