• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கனகராஜ் மரண வழக்கு விசாரணையை தொடங்கிய சேலம் காவல்துறை…

Byமதி

Oct 21, 2021

கொடநாடு வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான கனகராஜ் உயிரிழந்த வழக்கை டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் தலைமையில் இன்று முதல் விசாரணை செய்யப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடந்த கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓட்டுனரான கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், கனகராஜ் உயிரிழந்த சம்பவத்தை கனகராஜ் அண்ணன் தனபால் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு விபத்து என மூடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரிக்க சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டுள்ளார்.