• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…

ByKalamegam Viswanathan

Jul 31, 2023

மாற்றுத்திறனாளி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை குரு திரையரங்கம் நாகுநகர் சிறுமணியம்மாள் என்ற பெண், விக்னேஷ் குரு என்ற தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக கூடுதல் அபராதத்துடன் 4 லட்சம் கட்டவில்லை என்றால், வீட்டை ஜப்தி செய்வோம் என மிரட்டுவதாக கூறி, சிறுமணியம்மாளின் மாற்றுத்திறனாளி மகளான கவிதா என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் பலத்த சோதனையில் ஈடுபட்ட நிலையிலும், மண்ணெண்ணைய் எடுத்து வந்து தீக்குளிக்க முயன்றதால் பாதுகாப்பு கேள்விக்குறியான தாம்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நடந்து வருகிறது. பலத்த சோதனைக்கு பிறகு மனுக்களை அளிக்க வருபவர்களை போலீஸார் அனுமதிப்பது வழக்கமாக உள்ளதாம். இந்த நிலையில், பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது.