

மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், உடன்குடியில் வியாபாரியத் தாக்கிய பார் உரிமையாளரை கைது செய்யவும், தமிழக அரசுக்கு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை ஆலங்குளம் பகுதியில் தனியார் திருமண அரங்கத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் இணைந்து நடத்திய உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மதுரை மண்டல தலைவர் மைக்கேல்ராஜ், மாநிலச் செயலாளர்கள் குட்டி(என்ற)அந்தோணிராஜ், சபரிசெல்வம், மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் செல்வகுமார் மற்றும் காவல்நீதி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் குசலவன், சேர்மன் திருமதி மகேஸ்வரி குசலவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் மண்டல செயலாளர் ஜெயக்குமார், மண்டல துணைத் தலைவர் சுருளி மற்றும் வாசுதேவன், தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சின்னச்சாமி, துணைச்செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் உடன்குடியில் வியாபாரியத் தாக்கிய பார் உரிமையாளரை கைது செய்யவும் தமிழக அரசுக்கு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழா ஏற்பாடுகளை வடக்கு, கிழக்கு, மத்திய பகுதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
