மதுரை விமான நிலையத்தில், விமான நிலைய பாதுகாப்பு பணியகம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா உறுதிமொழியுடன் துவங்கியது.
மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார், விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அதிகாரி கணேசன் மற்றும் ஊழியர்களுடன் உறுதி மொழி ஏற்றனர்.
மதுரை விமான நிலையத்தில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு பணியகம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கலாச்சார வார விழா இன்று துவங்கியது.
மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார், விமான நிலைய பாதுகாப்பு முதன்மை அதிகாரி கணேசன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் மற்றும் விமான நிலைய ஊழியர்கள், இன்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில் விமான நிலைய பாதுகாப்பு மற்றும் பயணிகளை வழிநடத்தும் விதிகள்.
பயணிகள் விமான பயணத்தின் போது செயல்படும் விதம்
தடை செய்யப்பட்ட ஆயுதம் மற்றும் பொருள்கள் கொண்டு செல்ல தடை ஆகியவை எடுத்துரைக்கப்பட்டது.
விமான நிலைய பாதுகாப்பு உறுதிமொழியுடன் துவங்கி வரும் 6ம் தேதி வரை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் பல்வேறு சாதனைகள், மோப்ப நாய்களின் தனித்திறன் மற்றும் விமான நிறுவன ஊழியர்களின் கலாச்சார கலை நிகழ்ச்சி, ஒவியம், விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சி முடிவில் ஏர் இந்தியா விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரி செளமியா நன்றி கூறினார்.