• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அதிமுக நிமிர்ந்து நிற்கும் இயக்கம் யாருக்கும் கொத்தடிமை இல்லை.., முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி..!

ByKalamegam Viswanathan

Jul 27, 2023

அதிமுகவிற்கென தனிக் கொள்கை உள்ளது, கோட்பாடு உள்ளது. அதிமுக நிமிர்ந்து நிற்கும் இயக்கம், யாருக்கும் கொத்தடிமை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டியளித்துள்ளார்.
அதிமுக சார்பாக வருக ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெற உள்ள அதிமுக பொன்விழா ஆண்டு மாநாடு நடைபெற உள்ள இடத்தை முன்னால் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியதாவது..,
மூன்றாம் தலைமுறையாக அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில் எழுச்சிமிகு மாநாட்டை ஆகஸ்ட் 20ஆம் தேதி நடத்த உள்ளோம். மாநாட்டை நடத்துவதற்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உணவு குழுவை சேர்ந்த நாங்கள் இன்று வந்துள்ளோம். மாநாட்டிற்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள மிகச்சிறந்த சமையல் கலைஞர்களை ஆய்வு செய்து லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு ருசியான உணவை வழங்க உள்ளோம்.

நாளை மறுநாள் நடைபெற உள்ள பிஜேபி நடை பயணம் குறித்த கேள்விக்கு:

அது அவர்களுடைய கட்சி அவர்கள் நடத்துகிறார்கள்.

பிஜேபியின் கொத்தடிமை தான் அதிமுக என்று முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு:

அதிமுக நிமிர்ந்து நிற்கும் இயக்கம் யாருக்கும் கொத்தடிமை இல்லை. அதிமுகவிற்கென தனி கொள்கை உள்ளது, கோட்பாடு உள்ளது. மாநாட்டில் இருவது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

அண்ணாமலை ஆளுநரிடம் ஊழல் பட்டியல் கொடுத்துள்ளது குறித்த கேள்விக்கு:

ஊழல் செய்திருந்தால் ஊழல் பட்டியல் கொடுப்பார். நீங்கள் பார்ப்பதை போல் தான் நானும் பார்க்கிறேன் என்றார்.