• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

போல்கோடின் மருந்தை பயன்படுத்த தடை..!

Byவிஷா

Jul 19, 2023

சளி இருமலுக்காக பயன்படுத்தக்கூடிய போல்கோடின் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சளி மற்றும் இருமலுக்காக பயன்படுத்தப்படும் இந்த மருந்தை உட்கொண்டவர்களுக்கு அடுத்தடுத்த மாதங்களில் மயக்கவியல் மருந்தை செலுத்தினால் கடுமையான எதிர்வலைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக மருந்து ஒழுகும் முறை ஆணையங்கள் அந்த மருந்தை திரும்ப பெற்றுள்ளன.
எனவே இந்த மருந்துக்கு மாற்றாக வேறு மருந்தை மருத்துவர்கள் பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் நோயாளிகள் இந்த மருந்தை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உட்கொள்ளக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சை செய்யும் நோயாளிகள் இந்த மருந்தை கடந்த 12 மாதங்களுக்குள் எடுத்திருந்தால் மருத்துவரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.