• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

விஜய் சொன்ன கருத்து.., பாஜக இராம ஸ்ரீனிவாசன் பேட்டி!

Byகுமார்

Jun 19, 2023

அம்பேத்கர் பெரியாரை படிக்க வேண்டும் என விஜய் சொன்ன கருத்தை வரவேற்பதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் மதுரையில் பேட்டி.

மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா ஊடகப்பிரிவு பெருங்கோட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாநில ஊடகப்பிரிவு தலைவர் ரெங்கநாயகலு தலைமையிலும் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் நாகராஜன் மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் பரசுராம்பட்டி மண்டல் திருப்பதிமா நகர் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் முன்னிலையிலும் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் இராமஸ்ரீனிவாசன் பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்கபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிழக்கு மாவட்ட ஊடக பிரிவு தலைவர் செல்வமாணிக்கம் செய்திருந்தார் பின்னர்
பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராமஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழல் நிலவுகிறது. திமுகவின் பொறுப்பற்ற செயல்களை பாஜக கண்டிக்கிறோம்.
கலைஞரிடம் மத்திய அரசுக்கு எதிரான போக்குகள் இருந்தது. பலமுறை திமுக அரசை மத்திய அரசு கலைத்துள்ளது.
மத்திய அரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கலைக்க விரும்பவில்லை. திமுக அரசை கலைத்த போதெல்லாம் அதற்கு எதிராக குரல் கொடுத்தது பாஜக தான்.
அறிவிக்கப்படாத எமர்ஜென்சி சூழல் தமிழகத்தில் இருப்பது நல்லதல்ல.
தொடர்ந்து மத்திய அரசோடு, ஆளுநரோடு மோதல் போக்கோடு திமுக நடந்து கொண்டுள்ளனர்.
அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது திமுக அரசு.
செந்தில்பாலாஜி தவறு செய்யாவிட்டால் ஏன் பயப்பட வேண்டும், தவறு செய்யாத ஒருத்தர் மீது ரெய்டு வந்தால் திமுக ஏன் பயப்பட வேண்டும்.
தொடர்ந்து சிபிஐ அமலாக்கத்துறை மீது முரண்பாடு மோதல் போக்கை பின்பற்றி வருகின்றனர்.
இந்தியாவில் 61 வருடம் பாஜக எதிர்க்கட்சியாக இருந்துள்ளோம். எதிர்க்கட்சி அரசியல் பற்றி பாஜகவுக்கு தெரியும்.
திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது.
பிரதமர் மோடி மீது அவதூறு பதிவை போட்டால் காவல்நிலையத்தில் சிஎஸ்ஆர் வாங்கவே படாதபாடு பட வேண்டி உள்ளது.
ஆனால் முதல்வர் மீது அவதூறு பதிவு தெரியாமல் போட்டுவிட்டால் கூட உடனடியாக கைது செய்து விடுவார்கள்.

எனக்கும் முதல்வர் அய்யா ஸ்டாலின் தான். முதல்வர்களை மதிப்பவர்கள் பாஜகவினர். ஆனால் உங்களுக்கும் பிரதமர் மோடி தான்.

பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும். மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்.
காசி செளராஷ்டிரா தமிழ்ச்சங்கம் நடத்தினாலும் திமுக புறக்கணிக்கிறது. தமிழர் செங்கோலை வைக்கும் போது புறக்கணிக்கிறார். பாஜக எதிரி என திமுக நிழல் யுத்தம் நடத்துகிறார்கள்.
அண்ணா பெரியாரை மாணவர்கள் படிக்க வேண்டும் என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு,
அம்பேத்கர் பெரியார்
அண்ணாவை படியுங்கள் என நடிகர் விஜய் சொன்ன கருத்தை வரவேற்கிறேன்.
ஈவேராவை முழுமையாக மாணவர்கள் படிக்க வேண்டும்.
அப்போது தான் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பெரியார் பேசியது, இடஒதுக்கீடு, தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து பெரியார் பேசிய கருத்துக்களை மாணவர்கள் முழுமையாக படிக்க வேண்டும். அப்போது தான் அவர் குறித்து மாணவர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
நான் சொன்னால் மாணவர்கள் கேட்க மாட்டார்கள். விஜய் சொன்னால் கேட்பார்கள் என பேசினார்.