• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசு பள்ளிகளுக்கு ஜூன் மாத நாள்காட்டி வெளியீடு..!

Byவிஷா

Jun 13, 2023

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஜூன் மாத நாள்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. முதல் நாளான நேற்று பள்ளிகளுக்கு மாணவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் சென்றனர்.
இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் ஜூன் மாதம் டைரி நாள்காட்டி குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் 12ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு, ஜூன் 14ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு, ஜூன் 17ஆம் தேதி சனிக்கிழமை 1 முதல் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி, ஆறு முதல் பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சிபிடி பயிற்சி தேதி அறிவிக்கப்படும். ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரை தொல்லியல் பயிற்சி, ஜூன் 26 ஆம் தேதி அர்பா என பள்ளிக்கல்வித்துறை நாள்காட்டியை வெளியிட்டுள்ளது.