
நெல்லை சந்திப்பில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகர் வரை ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில்( வண்டி எண்-19577) வாரத்திற்கு இரண்டு நாட்கள் திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் வழக்கமாக காலை 7.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் தற்போது கேரளா கொங்கன் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் இந்த ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது அதன்படி காலை 7.50 மணிக்கு பதிலாக அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது இது குறித்து தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது, இதுகுறித்து பத்திரிக்கை தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளியாகின இந்நிலையில் இன்று திங்கட்கிழமை இந்த ரயில் மாற்றியமைக்கப்பட்ட நேரமான காலை 5.15 மணிக்கு புறப்பட்டு சென்றது, ஆனால் இந்த ரயில் காலை 7:50 மணிக்கு புறப்படும் என நினைத்த சில பயணிகள் சந்திப்பு ரயில் நிலையம் வந்து பார்த்தபோது ரயில் முன்கூட்டியே புறப்பட்டு சென்றது அவர்களுக்கு தெரிய வந்தது, இதனால் பயணிகளுக்கு டிக்கெட் எடுத்த வகையில் சுமார் ரூ.30ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக பயணிகள் புகார் கூறினர், எனினும் ரயில் புறப்பட்டு சென்றதால் டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, எனவே பொதுமக்கள் மத்தியில் மழைக்காலம் முடியும் வரை இந்த ரயில் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்ற அறிவிப்பை கொண்டு சேர்க்க ரயில்வே நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்
மேலும் இதே போல் புதன்கிழமை தோறும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் திருநெல்வேலி -காந்தி தாம் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரமும் காலை 7.50 மணிக்கு பதிலாக அதிகாலை 5.15 மணிக்கு மாற்றி ய அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
எனவே இந்த 2 ரயில்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டது குறித்து ரயில்வே பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி கொண்டு சேர்க்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.