• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இன்று முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட் திருவிழா கொண்டாட்டம்..,மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Byவிஷா

Jun 12, 2023

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் 12ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நெல்லை, திண்டுக்கல், சேலம் மற்றும் கோவை ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டிஎன்பிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக டிஆர்எஸ் சிஸ்டம் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் டிஎன்பிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கோவையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், கோவை கிங்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. கோவையில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் கோவை கிங்ஸ் அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன.