

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மணவர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.
உலக பாரம்பரிய சோடோ கான் கராத்தே சம்மேளனத்தின் சார்பில் கோவாவில் நடைபெற்ற 21 வது தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் சுமார் 600 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிகான் கண்ணன் தலைமையில் கலந்து கொண்டு வெற்றி பதக்கங்களை பெற்று சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

