• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவிலில் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நாகர்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையங்களை சென்னையிலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர் நகர்ப்புற நல வாழ்வு மைய செயல்பாடுகளை குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள் . உடன் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் .ஆனந்த் மோகன் , மாநகராட்சி துணை மேயர் .மேரி பிரின்சி லதா உட்பட பலர் உள்ளார்கள் .