• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jun 7, 2023

சிந்தனைத்துளிகள்

உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ மொழி பேசுகிறார்கள், எத்தனையோ கவலைகளை முறையிடுகிறார்கள். அத்தனையும் ஒரு இறைவன் எப்படி செவியேற்க முடியும்..? அத்தனை படைப்புகளையும் ஒரு இறைவன் எப்படி வழிநடத்த முடியும் என்று மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களிடம் ஒருவர் கேள்வி கேட்டார்.
அதற்கு அவர் அளித்த பதில்,
கார் ஓட்டக்கூடிய டிரைவரை நன்றாக கவனியுங்கள். கண் ரோட்டைப்பார்க்கிறது. கை ஸ்டேரிங்கை வளைக்கிறது. ஒரு கால் வேகத்தை கூட்டுகிறது. மறு கால் வேகத்தை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்கிறது. நாவு நண்பரிடம் பேசிக்கொன்டிரிக்கிறது. காது ரேடியோவிலிருந்து வரக்கூடிய இசையை ரசிக்கிறது. இத்தனைக்கும் மத்தியில் மனமோ மனைவி மாலையில் நேரத்திலே வரச்சொன்னதை எண்ணுகிறது. அற்பத்துளியில் படைக்கப்பட்ட மனிதனே ஒரு நேரத்தில் இத்தனை வேளை செய்யும் பொழுது அவனையும் படைத்து அகிலம் அதில் உள்ளவற்றையும் படைத்த இறைவனால் ஏன் முடியாது என்று பதிலளித்தார்