• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலை

ByA.Tamilselvan

May 30, 2023

குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா சிஎஸ்கேவை வெற்றிபெற வைத்தார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை அணி வெற்றி பெற்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சென்னை அணி வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அரசியல் தலைவர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதிக தமிழக வீரர்களை கொண்ட குஜராத் அணியை நாம் கொண்டாட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் “சென்னை அணியை வெற்றி பெறச் செய்தது குஜராத்தை சேர்ந்த பாஜக கார்யகர்த்தா ஜடேஜா. அவரது மனைவி பாஜக சட்டமன்ற உறுப்பினர். தமிழக வீரர்களே இல்லாத சென்னை அணி, அதிக தமிழ் வீரர்களை கொண்ட குஜராத் அணியை கொண்டாட வேண்டும்” என பேசினார்.