• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தேர்வு முடிவு பயம் காரணமாக பிளஸ் 1. மாணவி தற்கொலை

ByKalamegam Viswanathan

May 10, 2023

மதுரைஅலங்காநல்லூர் அருகே பிளஸ் 1. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே தோல்வி பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கு.முனியாண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி கூலித்தொழில் இவருடைய மகள் கோமதி 16 வயது அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளிவந்த நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வை தான் சரியாக எழுதவில்லை மதிப்பெண்கள் குறைவாக வரும் என்ற மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது நிலையில் அடுத்தது பதினொன்றாம் வகுப்பு தேர்வுகள் முடிவுகள் வரும் என்று அச்சத்தில் மானைவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது இது குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக விரைந்து வந்த சார்பு ஆய்வாளர் கமலமுத்து மற்றும் போலீசார் மாணவி கோமதி உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.