• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு..!

Byவிஷா

May 8, 2023

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 5,102 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு இருந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது
இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் தொடங்குவதற்கு இரு தினங்களுக்கு முன்பே பிரச்சாரங்களை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதால் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.