• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி..!

Byவிஷா

May 8, 2023
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்களை விட, மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தமிழகத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவிகள் 4.93சதவீதம் மாணவர்களை விட அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த மாவட்டத்தில் 97.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் பிறகு திருப்பூர் மாவட்டம் (97.79சதவீதம்) இரண்டாம் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் (97.59சதவீதம்) மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை 94.14 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.