• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

திருச்சி நகைக்கடையில் திருடிய கொள்ளையர்கள் 4 மணி நேரத்தில் கைது..!

Byவிஷா

Apr 28, 2023

திருச்சி தங்க கடை அருகே தங்கம் மற்றும் வெள்ளி நகை பொருட்களை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் நான்கு மணி நேரத்தில் கைது செய்தனர். திருச்சியை சேர்ந்த ஜோசப் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். ஜோசப் திரும்பி வந்து பார்த்தபோது கடைகளில் இருந்த 950 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து ஜோசப் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி பழனிக்குமார், சரவணன் ஆகிய இருவரையும் நான்கு மணி நேரத்தில் கைது செய்தனர். பழனிக்குமார் வீட்டில் இருந்த தங்க நகைகள் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை நேரில் சந்தித்து மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா பாராட்டு தெரிவித்தார்.