• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஈகம் அறக்கட்டளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வார்டு கள்ளிங்கரை சமுதாயக் கூடத்தில் பழங்குடியினர், கணவரால் கைவிடப்பட்டோர், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், முதியோர்கள் என 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாதவி தலைமை வகித்தார், 13-வது வார்டு உறுப்பினர் கிரிஜா ஜோஸ் முன்னிலை வகித்தார். கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஈகம் அறக்கட்டளை தலைவர் ஐயப்பன் சிறப்புரையாற்றினார். கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் தேவர் சோலை பேரூராட்சி தலைவர் வள்ளி, துணைத் தலைவர் யூனஸ்பாபு, முன்னாள் துணைத் தலைவர் செய்யது முகமது, 12 வது வார்டு உறுப்பினர் சாபி யா செரின் மற்றும் ஈகம் அறக்கட்டளை நிர்வாகிகள் அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பிரவீன் குமார் மற்றும் ஜோசப் செய்திருந்தானர்.