• Mon. Apr 29th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 27, 2023

சிந்தனைத்துளிகள்

முளையிலேயே கிள்ளவேண்டும்

குருவும் சீடர்களும் காட்டு வழியே பயணம் செய்தனர். அப்போது குரு தன் சீடர் ஒருவரிடம் அதோ அந்த செடியை பிடுங்கு என்றார். சீடர் உடனே பிடிங்கி எறிந்தார்.
சிறிது தொலைவு சென்றதும், முன்பை விட சற்று பெரிய செடியை காட்டி அதை பிடுங்கு என்றார் குரு.
மற்றொறு சீடர் வெடுக்கென பிடிங்கி எறிந்தார்.
கொஞ்ச தூரம் குருவும் சீடர்களும் நடந்தனர். இப்போது குரு ஒரு சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த செடியை காட்டி பிடுங்கு என்றார்.
முதலாமவர் முயன்றார் முடியவில்லை. மற்றொறு சீடர் முயன்றார், முடியவில்லை, இப்படியா எல்லா சீடர்களும் முயன்று முடியவில்லை.
எங்களால் முடியவில்லை என்றனர்.
குரு சொன்னார்-பிரச்சினைகளும் இந்த செடியை போல தான் என்று.
புரியாத சீடர் ஒருவர் , அது எப்படி செடியும் பிரச்சினையும் ஒன்றாகும் குரு என்றார்.
சிரித்தபடியே, சிறிய செடியை உங்களால் பிடுங்க முடிந்தது. ஆனால் சற்றே பெரியதான செடியை பிடுங்க முடியவில்லை. அது போல பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாம், வளரவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *