• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு புதிய விதிகள்..,தமிழக அரசு வெளியீடு..!

Byவிஷா

Apr 27, 2023
TN Government

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சார்பில் புதிய விதிகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்வு செய்யவேண்டிய கவுன்சிலர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, 80 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள மாநகராட்சியில் 230 கவுன்சிலர்கள் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மக்கள் தொகை 60 முதல் 80 லட்சம் வரை இருக்கும் மாநகராட்சிகளில் 200 கவுன்சிலர்கள் இருக்கலாம் என்றும், 2 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகராட்சிகளில் 52 கவுன்சிலர்கள் இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 30 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள நகராட்சிகளில் 22 கவுன்சிலர்களும் இருக்கலாம் என்றும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ள பேரூராட்சிகளில் 21 கவுன்சிலர்களும், 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை உள்ள பேரூராட்சிகளில் 12 கவுன்சிலர்கள் வரை இருக்கலாம் என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.