• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

குட்காவுக்கு விதித்த தடை செல்லும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!!

ByA.Tamilselvan

Apr 26, 2023

குட்கா பொருள்களுக்கு தடை விதித்து புதிய அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்
தமிழகத்தில் குட்கா,பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கு தடை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை, மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என புகையிலை நிறுவனங்கள் வாதத்தை முன் வைத்தன
ஆனால் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மக்களின் நலன் கருதி இது போன்ற ஆணையை பிறப்பித்திருக்கிறார்கள் என்றும் புகையிலை பொருட்களுக்கான தடை உத்தரவு சரிதான் எனவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து வந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் ஆணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் குட்கா பொருள்களுக்கு தடை விதித்து புதிய அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.