• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்

ByA.Tamilselvan

Apr 26, 2023

நாளை டெல்லி செல்லும் முதல்வர் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக குடியரசு தலைவரிடமும் கோரிக்கை வைக்கவுள்ளதாக தகவல்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு டெல்லி செல்கிறார். அங்கு, நாளை மறுநாள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தவிர நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாகவும் குடியரசு தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.