• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர்..!

Byவிஷா

Apr 21, 2023

கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிப்பதற்காக, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து வந்து செல்கின்றனர். கடும் கோடை காலம் என்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்க, இந்து அறநிலையத் துறை அமைச்சர், ஆணையர் உத்தரவிட்ட நிலையில், கோயில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் நேற்று முதல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் பணியைத் தொடங்கினர்.
கோடைகாலம் முழுவதும் இதுபோல நீர் மோர் வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது. தினமும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நீர் மோர் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.