மதுரை மாவட்டம் சோழவந்தான் கனரா வங்கி அருகில் உள்ள பலசரக்கு கடையில் காலாவதியான ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டதாக ஐஸ்கிரீம் வாங்கி சென்ற வாடிக்கையாளர் வணிக நிறுவனத்தில் வந்து கேட்டபோது கடையில் இருந்தவர்கள் வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஜெஸ்சி பலசரக்கு கடையில் ஆய்வு செய்து சென்ற நிலையில் இன்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து காலாவதியான ஐஸ்கிரீம் விற்றதற்காக ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்தனர் மேலும் அபராதத்தை கட்டும் வரை கடையை திறக்க கூடாது என உத்தரவிட்டு சென்றனர்

மதுரை மாவட்டம்சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி, தனது குழந்தைகளுக்காக சோழவந்தான் கனரா வங்கி அருகில் உள்ள பலசரக்குக் கடையில் பிரபல பலசரக்கு கடையில் இரண்டு அரை கிலோ ஐஸ்கிரீம் பாக்சுகளை வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று பாக்சை திறந்தபோது, ஐஸ்கிரீம் கெட்டுப்போன நிலையில் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதையடுத்து, அதன் தயாரிப்புத் தேதியைச் சரிபார்த்தபோது, அந்த ஐஸ்கிரீம் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே காலாவதியானது (Expired) தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மணி, உடனடியாக பேரூராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார் இதனை அடுத்து பலசரக்கடைக்கு வந்த சுகாதார ஆய்வாளர் ஜெஸ்சி மற்றும் பணியாளர்கள் கடையில் இருந்த ஐஸ்கிரீம்களை ஆய்வு செய்தனர்
அப்போது பேரூராட்சி அதிகாரிகளின் முன்பே கடை உரிமையாளர் “பொருட்களை வாங்கும்போது தேதியைப் பார்த்து வாங்க வேண்டியது உங்கள் பொறுப்பு” எனக் கூறி, கடை உரிமையாளர்கள் ஐஸ்கிரீம் வாங்கிச் சென்ற மணியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், ஆதாரமாக இருந்த காலாவதியான ஐஸ்கிரீம் பாக்சையும் வாடிக்கையாளரின் கையிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டனர்.
சம்பவ இடத்திலிருந்த பேரூராட்சி அதிகாரிகள், “பொருட்களை விற்பனை செய்யும் முன் காலாவதி தேதியைச் சரிபார்ப்பது கடைக்காரர்களின் கடமை” என எச்சரித்தனர்.
இருப்பினும், “நிறுவனம் சப்ளை செய்யும்போதே இப்படித்தான் கொடுத்தது” எனக் கூறி கடை உரிமையாளர்கள் அலட்சியமாகப் பதிலளித்தனர். இதனைத் தொடர்ந்து காலாவதியான ஐஸ்கிரீம் விற்பனை செய்த கடைக்கு ஆய்வுக்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காலாவதியான ஐஸ்கிரீம் விட்டதற்காக ரூபாய் 10,000 அபராதம் விதித்தனர் அபராத தொகையை கட்டும் வரை கடையை திறக்க கூடாது எனவும் எச்சரித்து சென்றனர் சோழவந்தானில் பிரபலமான பலசருக்கு கடையில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்ததற்காக அபராதம் விதித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது









