• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சித்திரை மாத சோமாவார பிரதோஷம்..,அருப்புக்கோட்டை நந்திகேஸ்வரர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள்..!

Byவிஷா

Apr 18, 2023

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஸ்ரீ சொக்கநாதர் திருக்கோயிலில், சித்திரை மாத சோமாவார பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திகேஸ்வரர் பெருமாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையதுறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவிலில் பிரதோஷ நிகழ்ச்சி இன்று(17.4.23) வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அருள்மிகு நந்திகேஸ்வரர் பெருமானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி திருமஞ்சனம், அரிசி மாவு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்கள் உடன் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தீப தூப மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்