• Sat. Oct 31st, 2026

விலைவாசி உயர்வை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

BySeenu

Oct 31, 2026

தவெக ஆட்சியில், பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக மகளிரணி சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கோவை மாவட்ட மகளிர் தொண்டரணி
மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் அன்னம்மாள், கனிமொழி, ரங்கநாயகி, ஜெயலலிதா, கவிதா ஆகியோர் தலைமை தாங்கினர்.

கோவை மாவட்ட செயலாளர்கள் துரை. செந்தமிழ் செல்வன், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

திமுக மாணவரணி மாநில செயலாளர் வீரமணி, தலைமை கழக பேச்சாளர் கலாவதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து திமுக மாணவரணி மாநில செயலாளர் வீரமணி பேசுகையில்;-

தவெக அரசில் தற்போது சட்டம் ஒழுங்கு என்ன ஆனது?, விலைவாசி உயர்வு அதிகரித்துக்கொண்டே போகின்றது. தேர்தலுக்கு முன்பு விஜய் மாமா நீங்க என்ன எல்லாம் பேசினீங்க? “நாடா இது காடா” அப்படினு கேட்டிங்க, இப்ப நாடு சுடுகாடா மாறிட்டு இருக்கு.பெண் பிள்ளைகளை கடைக்கு அனுப்ப முடியவில்லை கல்லூரிக்கு அனுப்ப முடியவில்லை, பள்ளிக்கு அனுப்ப முடியல. பயந்து நடுங்கற சூழ்நிலை இப்போது தமிழ்நாட்டில் இருக்கிறது. தூங்கிட்டு இருந்த குழந்தையை காணோம், அதை கண்டுபிடிக்க முடியல.

தமிழ்நாட்டில் கொலை கொள்ளை, பாலியல் தொல்லை, கூட்டு பலாத்காரம் என அதிகமாகி விட்டது. தவெக நிர்வாகிகள் பாலியல் குற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என குற்றம் சாட்டியவர், அது தொடர்பாக நீண்ட பட்டியலை வெளியிட்டார். சிறைச்சாலைகளில் கைதிகள் தப்பி ஓடுகின்றனர் அவ்வளவு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக தமிழகம் உள்ளது. இந்த தீபாவளி பரிசாக நண்பா நண்பிகளுக்கு கடுமையான விலைவாசி உயர்வை விஜய் பரிசளித்துள்ளார் என கூறினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மேயர் ரங்கநாயகி, துணைமேயர் வெற்றிச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் சரஸ்வதி, மண்டல தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனா லோகு மற்றும் மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்பாளர்கள், அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.