மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள வணிக வரித்துறை இணை ஆணையர் அலுவலக வளாகத்தில் புதுப்பிக்கப்பட்டு கூடுதலாக முதல் தளம் கட்டப்பட்டுள்ள வணிகவரித்துறை பணியாளர் பயிற்சி நிறுவனக் கட்டடத்தினை அமைச்சர் நிர்மல் குமார் திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது்,
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்தபோது சுவிட்ச் ஓவர் செய்தபோது தவறு நடந்துள்ளது துணை குடியரசுத் தலைவருக்காக பாதுகாப்பு நடைமுறைப்படி ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது.

அவர் கிளம்பிவிட்டார் என நினைத்து சுவிட்ச் ஆப் செய்திருக்கிறார்கள் அதில் பிரச்சனையாகிதான் மின்தடை ஏற்பட்டுள்ளது.
அந்த தவறு காரணமாக இந்து அறநிலையத்துறையில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
கோவிலில் உள்ள உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல் ) அவர்கள் தான் பொறுப்பு
மின்சாரம் எல்லாம் தடை இல்லாமல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் கோவிலில் உள்ள பவர் போர்டில் இருந்தவர்கள் தவறுதான் ; அதனை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவுள்ளார்கள்.
எல்லாமே பொதுவாக பவர் கட் என பார்க்கப்படுகிறது எங்கெல்லாம் பிரச்சனைகள் உள்ளதோ குறைபாடுகள் அனைத்தையும் சரி செய்து வருகிறோம்.
தற்காலிகமாக குழுக்கள் அமைத்து கண்காணித்து வருகிறோம் பழைய டிரான்ஸ்பார்மர்கள் வழித்தடங்கள் அனைத்தையும் சரி செய்து வருகிறோம்., முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து வருகிறோம் நிறைய ஆட்களை வேலைக்கு எடுத்து வருகிறோம்.

மு க ஸ்டாலின் கூறிய பாதுகாப்பு இல்லை என்பது குறித்த கேள்விக்கு,
எல்லாருக்கும் என்ன பாதுகாப்பு கொடுக்கப்பட்டதோ அதே பாதுகாப்பு தான் கொடுக்கப்பட்டது. நாங்கள் போகும் போது என்ன பாதுகாப்பு கொடுத்தார்களோ அதே பாதுகாப்பு தான் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது எந்த பிரச்சனையும் கிடையாது.
எங்களுக்கு எப்படி காவல்துறை நடைமுறைகள் போடப்பட்டதோ அதேபோலதான் இருந்தது. கடந்த காலங்களில் என்ன நடைமுறை பாலோவ் பண்ணார்களோ அதை மேம்படுத்தும் பணிகளை தான் செய்வது வருகிறோம்.
மின்சாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என ஆர்பி உதயகுமார் கூறியது குறித்த கேள்விக்கு ?

அவரைப் பற்றி நாம் நிறைய பேசி விட்டோம் ஒவ்வொரு நாளும் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார்.
கண்டிப்பாக எங்கெங்கு குறைகள் இருக்கிறதோ அதனை சரி செய்கிற வேலைகளை முழுவீச்சில் செய்து வருகிறோம் மின்சாரத்தில் எங்கெங்கு பிரச்சனை உள்ளது எங்கு தடைபடுகிறது அதனை சரி செய்கிறோம்
பழைய டிரான்ஸ்பர்களை மாற்றுகிறோம் நிறைய ஆட்களை புதிதாக எடுக்கிறோம் தற்காலிக பணியாளர்களை பணிக்கு எடுக்கிறோம் இதனை சரி செய்யும் வேலைகளை முழுவீச்சில் நடந்து வருகிறது.
தினசரி பயன்பாட்டில் உள்ள சவாலான துறைகள் 25 ஆயிரம் சிறைவாசிகள் 110 க்கு மேல் சிறைச்சாலைகள் உள்ளதுறை, பள்ளி கல்வி துறை ஆகியவை தினசரி நடவடிக்கைகள் உள்ள துறை இந்த துறைகள் அதீத சவாலான இருக்கக்கூடிய இடம்
சிறைகாவலர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்த கேள்விக்கு?
அனைத்து பணியிடங்களையும் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான வேலைகளை செய்து வருகிறோம்; காலி பணியிடங்களை நிரப்புவதற்காக ஒன்று இரண்டு சிறைவாசிகள் உள்ள கிளைச்சிறைகளை மூடியுள்ளோம், இன்னும் 16 கிளைச் சிறைகளை சிறைவாசிகள் குறைவாக உள்ளதை கண்டுபிடித்து அதனையும் மூடவுள்ளோம்.
மீனாட்சியம்மன் கோவிலில் மின தடை குறித்த கேள்விக்கு?
இந்து நிலைத்துறை அதிகாரிகளிடம் யார் மீது தவறு இருக்கிறார்கள் என கண்காணித்து வருகிறார்கள் ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை குறித்து அறிவித்து விடுவார்கள்.
மீனாட்சியம்மன் கோவிலில் மின்தடையில் சதி உள்ளதா?
அந்த குறைகளை சொல்லிக்கொண்டு இருக்க முடியாது நடவடிக்கைகளை
சரி செய்வதற்கான வேலையை தான் செய்து கொண்டிருக்கிறோம்.
டிஎன்பிஎஸ்சி மூலமாக பணியாளர்கள் நிரப்பினால் எட்டு மாதம் ஆகிவிடும் புதியதாக பொருள் வாங்க வேண்டும் என்றால் டெண்டர் போட்டு 6 முதல் 8 மாதம் ஆகிவிடும் தேவையான காலகட்டங்கள் இருக்கிறது.
பிரச்சனைகள் உள்ள அடையாளங்கள் இடத்தை கண்டறிந்து; கடந்த ஆட்சியில் மின்னகம் ஒன்று இருந்தது அந்த மின்னகம் என்ன பண்ணிக் கொண்டிருந்தது என தெரியும் தற்போது ai தொடர்புடையதாக்கி வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளை செய்கிறோம்

முதலில் இந்த துறையில் உள்ள ஊழல்களை நிறுத்தியுள்ளோம் எங்கு இடைவெளி இருந்ததோ அதனை சரிசெய்துள்ளோம்,., ஊழலை நிறுத்தியுள்ளோம். மேலளவிற்கு எங்குமே ஊழல் இல்லை, பார்ட்டி ஃபண்டு இல்லை அனைத்தையும் நிறுத்தியுள்ளோம் என்றார். சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுவருகிறோம்
மதுரைக்கு கூடுதலாக அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பா?
மதுரைக்கு யார் அமைச்சராக வருவார்கள் அதற்கு மாண்புமிகு முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் எப்ப என்ன தேவையோ அதற்கு முடிவு எடுப்பார்
மின்சாரத் துறையில் உள்ள சிலர்தான் திட்டமிட்டு செய்கிறார்கள் என்று முன்னர் கூறியது குறித்த கேள்விக்கு?
கோவிலில் விசாரித்துவிட்டு அது பவர் கட் இல்லை ஜெனரேட்டரில் இருந்து என்ன பிரச்சனை என்பதை அவர்கள் தான் விசாரிக்க வேண்டும்,்மின்சாரத்துறை விசாரிக்க முடியாது., அவர்கள் விசாரித்துவிட்டு யார் மீது தவறு இருக்குதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள்
இந்து அறிநிலையத்துறை பவர் ஹவுசில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லியிருக்கிறார்கள்
2011 இல் மின்தடையால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் மின்தடை அதிகரிப்பதால் பிரச்சனையா?
மின் தடையை சீரமைக்கும் செய்கின்ற வேலையை செய்து வருகிறோம். எங்கெங்கெல்லாம் மின்வெட்டு எங்கு பிரச்சனை சொல்கிறார்களோ அங்க என்ன பிரச்சனை சரி செய்வதற்கான வேலைகளை செய்து வருகிறோம்
நிறைய இடத்தில் தவறான செய்திகள் வருகிறது தலைமைச் செயலகத்தில் பவர் இல்லை என செய்தி வந்தது,.

4 அறையில் மட்டும்தான் பவர் இல்லை போர்டில் பிரச்சனை என்கிறோம் எத்தனை மீடியா மீண்டும் அதனை செய்தியாக வெளியிட்டீர்கள்
நிறைய மீடியா வழியாக தான் நரேடிவ் செட் பண்ணப்படுகிறது
மின் கொள்முதல் குறித்த கேள்விக்கு?
எஸ்டிமேஷன் டிரான்ஸ்பார்மர் விலை, கண்டக்டர் விலை 10 சதவீதம் 20 சதவீதம் குறைந்தால் தான் டெண்டர் போட முடியும் நிறைய கட்டுப்பாடுகள் செட் ஆகவில்லை அதன்படி பார்த்தால் மொத்தமாக தனியாருக்கு கொடுப்பது போல இருக்கும்
வாடிக்கையாளர்கள் டேட்டா சர்வீஸ் விசயங்கள் அனைத்தும் இருக்கும் சாதாரணமான லெட்டர் பேடு கம்பெனியை உள்ளே விண்ணப்பிக்க அனுமதிக்க முடியாது இதனை சரி செய்வதற்காக தான் கட்டுப்பாட்டை ஒரு சில பேர் மட்டும் கலந்து கொள்வது போல இருந்தது
அதனை ரத்து பண்ணி தற்போது மறு டெண்டர் நடத்துவதால் 3 பேர் பங்கேற்பதில் இருந்து இப்போது 17 பேர் பங்கேற்கிறார்கள்
முன்பு மூன்று பேர் மட்டும் தான் பங்கேற்க முடியும் மாதிரி இருந்தார்கள் இப்போது 20 சதவீதம் 15 சதவீதம் குறைவாக உள்ளது இதை சீரமைத்துவிட்டு மறு டெண்டர் விடப்போகிறோம்
மின்சார கொள்முதலை பொறுத்த மட்டிலும் 35 முதல் 45 ரூபாய் கொள்முதல் பண்ணுகிறோம்
பேக்டரி சைடுல இருந்து 12 ரூபாய் 13 ரூபாய் கேட்பார்கள் என பார்த்தோம்; கம்பெனியிடம் பேசி போடக்கூடாது டெண்டர் வழியாக தான் போட வேண்டும் என உறுதியாக சொல்லி இருக்கிறோம் முன்னாள் உள்ள நடைமுறைகளை பின்பற்றக் கூடாது என சொல்லியிருக்கிறோம்

இன்னொரு டெண்டர் அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளோம் இதற்கிடையில் மீடியம் டெண்டர் LONG TERM டெண்டர் போடவுள்ளோம்
நிர்வாகத்தில் சீரமைப்பு பண்ணுவதற்கான மாற்றம் செய்து வருகிறோம் 6 சென்டராக மாற்றியுள்ளோம் புதியதாக பணியாளர்களை நியமித்துள்ளோம் ஒரு சில மாதங்களில் நல்ல மாற்றங்களை பார்க்காமல்
தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வாய்ப்பிருப்பதாக” துணை ஜனாதிபதி என்ன எண்ணத்தில் சொன்னார் என தெரியவில்லை.
அது பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.