• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த பெண் சிறுத்தை உயிரிழப்பு

கூடலூர் அருகே கோட்டை வயல் பகுதியில் கிணற்றில் விழுந்த 2 வயது பெண் சிறுத்தை உயிரிழப்பு வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..


கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள் அடர் வனப்பகுதிகள் உள்ளதால் யானை சிறுத்தை கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது தொடர்ந்து வருகிறது .இந்நிலையில் தேவாலா கோட்டை வயல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 அடி கிணற்றில் சிறுத்தை ஒன்று விழுந்துள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கிணற்றுக்குள் விழுந்திருந்த சிறுத்தையை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் நீண்ட நாட்களாக இந்த பகுதியில் திறந்திருந்த கிணற்றில் சிறுத்தை விழுந்து இறந்ததாகவும் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய வனத்துறையினர் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் திறந்த வெளி கிணறுகள் அனைத்தும் மூடப்படும் என தெரிவித்துள்ளனர்.