• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் குடிநீர் குழாய் வரிசெலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும்

ByKalamegam Viswanathan

Mar 31, 2023

சோழவந்தானில் குடிநீர் குழாய் வரி செலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும் பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் வீட்டு வரி குடிநீர்குழாய் வரி பேரூராட்சி நிர்வாக மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்.முறையான வரி செலுத்தாமல் சிலர் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் மார்ச் 30க்குள் வீட்டு வரி குழாய் வரி செலுத்தவில்லை எனில் குடிநீர குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் தங்கள் வரியை செலுத்தி வருகிறார்கள்..