• Fri. Apr 26th, 2024

எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டி

Byp Kumar

Mar 31, 2023

எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் நடந்தது என்பது தெரியவில்லை – நடிகர் சூரி பேட்டி.
தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் விடுதலை படத்தை வெகுவாக கொண்டாடுகிறார்கள்.
மதுரை சினிப்ரியா திரையரங்கில் ரசிகர்களோடு விடுதலை -1 திரைப்படத்தை பார்ப்பதற்காக திரைப்படத்தின் கதாநாயகன் சூரி நேரில் வந்து ரசிகர்களோடு அமர்ந்து திரைப்படத்தை கண்டு ரசித்தார்.


முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது :விடுதலை திரைப்படம் தாமதமானதற்கு பொதுமக்கள் காரணம் கேட்டனர் ஆனால் இவ்வளவு தாமதத்திற்கு பின்னும் நல்ல திரைப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்
விடுதலை திரைப்படத்தை தயாரிப்பாளர்களும் ரசிகர்களும் வெகுவாக கொண்டாடிவருகிறார்கள்.எனது குலசாமி சங்கையாவை கும்பிட்டு விட்டு திரைப்படம் பார்க்க வந்திருக்கிறேன் .நல்ல திரைப்படத்தை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது .எந்த திரைபடத்தையும் வெற்றி படமாக கொண்டு செல்வது ரசிகர்கள் தான். நான் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படத்தை எனது ரசிகர்கள் வெற்றியுடன் கொண்டாடிவருகின்றனர். தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை விட வேறு என்ன பெருமை இருக்கிறது .இந்த படத்திற்கோ இந்த படத்தில் யாருக்கு தேசிய விருது கிடைத்தாலும் அது எனக்கு கிடைத்த போன்ற மகிழ்ச்சியை தரும். தேசிய விருது பெற்ற வெற்றிமாறனின் படத்தில் நடித்ததை விட எனக்கு வேறு என்ன வேண்டும் , மிகப்பெரிய நடிகர் விஜய் சேதுபதியோடு நடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி .இந்தத் திரைப்படத்திற்காக ஒவ்வொரு கலைஞர்களும் மிகவும் கஷ்டபட்டிருக்கிறார்கள்
ரோகினி திரையரங்கில் நடைபெற்ற அனுமதி மறுப்பு சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சூரி
எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்றுதான் என்பதை தெரியப்படுத்த தான் திரையரங்கு வந்தது, நீ நான் என்ற வேறுபாடு திரையரங்கிற்கு கிடையாது,, இந்த சம்பவத்திற்கு நான் வருத்தப்படுகிறேன், எந்த சூழலில் இது நடந்தது என்று தெரியவில்லை, திரையரங்கில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *