• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா..!

Byவிஷா

Mar 29, 2023
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் தின விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ம. ராஜசேகரன் தலைமை பேசுகையில், மாணவ, மாணவிகள் சரியான வழிகாட்டுதலுடன் செயல்பட்டு தங்கள் நலனை போல் நுகர்வோர் நலனை பாதுகாக்க வேண்டும் என்றார்.
பள்ளி, கல்லூரிகளில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்பான பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  பரிசு,   பாராட்டு சான்று  மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ராஜசேகரன் வழங்கினார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன்,   முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு. சேக் மன்சூர், வட்ட வழங்கல் வட்டாட்சியர்கள் செந்தில் தமீம் ராஜா, தன்னார்வ நுகர்வோர் அமைப்பாளர்கள் பிரேம்சதீஷ், செய்யது இப்ராஹிம், கரீம் கனி, ஜான் போஸ், லதா, துரைப்பாண்டியன் அவர்கள், திரு. மாதவன், மணிமாறன்  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.