• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

டெல்லியில் நிலநடுக்க அனுபவம் நடிகை குஷ்பு பரபரப்பு ட்விட்

ByA.Tamilselvan

Mar 23, 2023

ஆப்கானிஸ்தானில் எற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்ட நிலையில், தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு பதிவிட்டுள்ளார்
திரைப்பட நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக அண்மையில் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நலடுக்கம் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. இந்தியாவின் தலைநகர் டெல்லி, பஞ்சாப், காஷ்மீர், ஹரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. . இந்நிலையில் டெல்லியில் நிலநடுக்கத்தை, தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு பதிவிட்டுள்ளார். இது தொடர்பான அவரது ட்வீட்டில், “டெல்லியில் நிலநடுக்கத்தை உணர்ந்த பிறகு தெருக்களில் உள்ளோம். இங்கு என்சிஆர் முழுவதும் பலத்த நடுக்கம். சுனாமிக்குப் பிறகு இந்த நிலநடுக்க அனுபவம். இந்த நடுக்கம் சுமார் 4 நிமிடங்கள் நீடித்தது. வீட்டில் உள்ள மின்விசிறிகள் மற்றும் சரவிளக்குகள் அப்படியே நகர, சோஃபாக்கள் அலறுவது போல் இருந்தது, கீழே ஒரு அமைதியான ஜெனரேட்டர் போன்ற சத்தம் எங்களை வேகமாக வெளியேறச் சொல்ல, நாங்கள் வீட்டுக்கு வெளியில் வந்துவிட்டோம். அனைவரும் வீடு திரும்புங்கள், பாதுகாப்பாக இருங்கள் மற்றும் கவனித்துக் கொள்ளுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.