• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழா

ByA.Tamilselvan

Mar 20, 2023

மதுரை மாவட்டம் தங்களாச்சேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப்ள்ளியில் ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழா நடைபெற்றது.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தங்களாச்சேரி கிராமத்தில் உள்ள நிடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்கும் விதமாக ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் நிகழ்ச்சிநடைபெற்றது.
வட்டார வள மையம் ஆசிரியர் பிரசாத் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.மாணவர்களுக்கு புதிய முறைகளில் ,விளையாட்டுக்கள் மூலமாகவும் எளிமையாக கற்பித்தலை உருவாக்கும் விதமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் இல்லம் தேடி தன்னார்வலர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனா். விழாவினை சிறப்பாக பள்ளி தலைமை ஆசிரியர் செய்திருந்தார்.